‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தொடர்ந்து, நயன்தாராவின் புதிய படத்தின் பெயரை வெளியீட்டுள்ளது படக்குழு.
காத்துவாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.
அதில் கண்மணி என்ற கதபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நயன்தாரா.
அதை தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் புதிய படத்தின் பெயரை வெளியீட்டுள்ளனர் படக்குழு.
புதிய படம்
நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் பெயர் ’02’ என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜி.கே. விக்னேஷ் இந்த படத்தை இயக்குகிறார்.
ட்ரீம் வாரியர் நிறுவனம் படத்தை தயாரிக்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். மற்றும் தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். K13 படத்தை எடுத்த இயக்குனர் பரத் நீலகண்டன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர் நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இது.
ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்றும் படம் முழுவதும் சென்னையில் உள்ள ஒரு பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஓடிடியில் வெளியிடு
இதனையடுத்து கடந்த ஆண்டில் இருந்தே இந்தப் படம் ஓடிடியில் வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் S.R பிரபு தெரிவித்துள்ளார். பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்-ஸ்டார் இந்த படத்தை வாங்கியுள்ளது. இதை அந்த நிறுவனமே தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப் படுத்தியுள்ளது.
நயன்தாராவின் படங்கள்
தற்போது சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் தெலுங்கு படம் ஒன்றில் நயன்தாரா நடித்து வருகிறார். இதனையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில், இந்த ’02’ என்ற படித்தில் நடித்து முடித்து இருக்கிறார்.
படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.