Editor's Picksஇந்தியா

காஷ்மீரில் மீண்டும் தலைதூக்கும் பயங்கரவாதம்; காவலர் ஒருவர் சுட்டுக் கொலை!

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரை சேர்ந்தவர் சைஃபுல்லா காத்ரி. 45 வயதான இவர் ஸ்ரீநகரின் புறநகர்ப் பகுதியான சவுரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல் தனது இரவுப் பணியை முடித்துவிட்டு காலை வீடு திருப்பியிருக்கிறார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மதியம் 3 மணிக்கு தனது 9 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சைஃபுல்லா வெளியே சென்றார்.

Initial hospital costs for gunshot wounds just 'tip of the iceberg' | News Center | Stanford Medicine

துப்பாக்கிச் சூடு

அவர் தன் வீட்டை கடந்து சென்ற சிறிது தூரத்தில் அங்கு இருந்த ஒரு காரில் மறைந்திருந்த தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கி விட்டனர். இதில் அவரது தலை, கழுத்து போன்ற உடலில் பல்வேறு பகுதிகளில் குண்டு பாய்ந்தது. சுயநினைவை இழந்த சைஃபுல்லா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

தீவிரவாதிகள் சுட்டதில் அருகில் இருந்த அவரது மகளின் கையில் ஒரு குண்டுபட்டது. அதனால் அந்த குழந்தையும் சம்பவ இடத்திலேயே மயங்கியது. பின்னர், அந்த தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதனிடையே அங்கிருந்த பொதுமக்கள் சைஃபுல்லாவையும், அவரது மகளையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

Five terror incidents in Kashmir Valley on second anniversary of Article 370 abrogation- The New Indian Express

உயிரிழப்பு

மருத்துவமனையில் இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சைஃபுல்லா காத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவரது மகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டனம்

காஷ்மீரில் தொடர்ந்து காவல்துறையினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த இந்த ஆண்டில் மட்டும் 7 போலீசார் உயிரிழந்துள்ளனர். அதுவும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் காவலரை சுட்டு கொன்ற இந்த சம்பவத்தை பற்றி காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts