சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் அறிவிப்பு
சென்னை துறைமுகம் டு மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலையில், சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும், இறங்கும் மேம்பாலம்களும் அமைக்கப்பட உள்ளது. இரண்டாவது அடுக்கில் துறைமுகம் டு மதுரவாயல் வரை கனரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை துறைமுகம் டு மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்க டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. டெண்டர் எடுக்கும் நிறுவனம் இரண்டரை ஆண்டுகளில் பணிகளை முடிக்க வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 5,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கி.மீ. நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலையாக அமைக்கப்படவுள்ளது.

