சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

நீட் தேர்வு : தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை !

அரியலூரில் நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி தற்கொலை

அரியலூர் ரயில்வே காலனி தெருவைச் சேர்ந்தவர் நடராஜனின் மகள் நிஷாந்தினி(19). இவர் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்த இவர் 12ம் பொதுத் தேர்வில் 430 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து நீட் தேர்வுக்காக விண்ணப்பித்து படித்து வந்தார். அவர், நாளை நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலை மீட்டு பேராத பரிசோதனைக்க்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி நிஷாந்தினி, நீட் தேர்வை இரண்டாவது முறையாக எழுதத் தயாராகி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாணவி தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts