சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – சென்னையில் பாதி !

தமிழகத்தில் கடந்த நாட்களில் கொரோனா தொற்றால் 773 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 1,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு 

இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20,000த்தைத் தாண்டியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 773-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

corona virus

சுகாதாரத்துறை அறிக்கை

நேற்று தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘நேற்று ஒரே நாளில் 22,757 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,063 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,64,131 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து நேற்று மட்டும் 563 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு

பாதிப்பு

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதித்து 5,174 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மேலும், சென்னை 497 பேருக்கும் , செங்கல்பட்டு 190 பேருக்கும், கோயம்புத்தூர் 72 பேருக்கும், திருவள்ளூர் 43 பேர ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விரைவாக அதிகரித்து வருகின்றது.

மத்திய அரசின் விதிமுறை

கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும்போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை. ஆனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் 4 சதவீதம் மட்டுமே பாதிப்பு உள்ளது. எனவே கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது’ என தமிழக சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ma.subramaniyan

Related posts