சமூகம்தமிழ்நாடு

50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு !

தமிழகம் முழுவதும் முக்கிய பொறுப்பில் இருந்த 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு

தமிழகத்தில் 50 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய நியமனங்கள் தொடர்பாக வெளியிட்ட உத்தரவில், வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பதவியை வகித்து வரும் எஸ்.கே. பிரபாகர், வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

Irai Anbu IAS

கூடுதல் பொறுப்பு

இதனை தொடர்ந்து தொழிலாளர் துறை செயலாளராக இருந்த கிர்லோஷ் குமார், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மேன்பாட்டு ஆணையத்தின் முன்னாள் செயலாளரான ஆனந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மகளிர் மேன்பாட்டு நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக உள்ள ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு, கூடுதலாக தேசிய சுகாதார திட்டத்தின் இயக்குனர் பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை சிறப்பு செயலாளரான ஜெயஸ்ரீ முரளிதரன், டிட்கோ நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை

மேலும், சிறப்புப் பணியில் இருந்த முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு மேலாண் இயக்குனரான கூடுதல் தலைமை செயலாளர் சாய்குமார், காகிதத்தாள் நிறுவன தலைவராக மாற்றப்பட்டு உள்ளார். நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தீரஜ் குமார், வணிகவரி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குனர், பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில்துறை, வணிகவரித்துறை, நிறுவன இயக்குனர்கள்

வருவாய் நிர்வாக ஆணையரான சித்திக், சென்னை மெட்ரோ ரயில் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் நல ஆணையரான மதிவாணன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியரான சிவராசுக்கு, வணிகவரித்துறையின் இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன தலைவராக இருந்த மரியம் பல்லவி பல்தேவ், தொழில்துறை கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார். பட்டுவளர்ப்பு ஆணைய இயக்குனரான சாந்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார் என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் கூடிய விரைவில் அந்தந்த துறையின் கீழ் பொறுப்பு ஏற்பார்கள் என இறையன்பு ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

Related posts