2021-2022 ஆண்டிற்கான உணவுப் பாதுகாப்பு தர குறியீட்டில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்திருக்கிறார்.
உணவுகளின் முக்கியத்துவம்
மனிதன் உள்பட ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது உணவு. நம் உடலை நோய்களின்றி பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நல்ல உணவுகளை உட்கொள்வது அவசியம். மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களும் உணவு இல்லை என்றால் நம் உடல் சோர்வடைந்து விடும். வேலைகளை செய்ய போதுமான சக்தி இருக்காது. வெளிநாடுகளில் ஒருநாள் உணவை 5 நேரங்களாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் காலை, மதியம், இரவு என்று 3 நேரங்களாக எடுத்துக் கொள்கிறோம்.
உணவு பாதுகாப்பு குறியீடு
ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு மற்றும் மத்திய சுகாதாரத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படும். அதில் மனித வளம், நிறுவனத் தரவுகள், இணக்கம், உணவு சோதனை கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன், நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை மதிப்பீடு செய்து புள்ளிகள் வழங்கப்படுகிறது.
தமிழகம் முதலிடம்
அந்த வகையில் 2021-2022ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு மத்திய சுகாதாரத் அமைச்சர் துறை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் 82 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை குஜராத்தும் 3ஆவது இடத்தை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளது. மேலும் சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்தையும் மணிப்பூர் இரண்டாவது இடத்தையும் சிக்கிம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு ஆந்திரப் பிரதேசம் 26 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. தெலங்கானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களும் கடைசி இடம்பெற்றுள்ளன.
மத்திய அமைச்சர்
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் ‘மாநிலங்கள் தங்களது மக்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார உணவு பழக்கவழக்கங்களை உறுதி செய்வது மிக முக்கியமானது. சுகாதாரமான தேசத்தை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றுபடுவது இந்த சூழலுக்கு மிகவும் அவசியம்’ என்று கூறினார்.