டெல்லி விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாட்டவர் ஒருவரிடம் சோதனைகள் நடத்தினர். அப்போது அவரது கைப்பெட்டியில் (Trolley bag) இருந்து 75 கோடி மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது .
கடத்தலில் ஈடுபட்டவர் மீது 1985ம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் சட்டம் பிரிவு 43 மற்றும் சுங்கச் சட்டம் பிரிவு 108,1962 (Section 43 in The Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985) இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் பறிமுதல்
இதே போல நேற்று (08.06.2022) இஸ்தான்புல்லில் இருந்து வந்த பயணியிடம் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்கக் கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. 865 கிராம் எடையுள்ள இந்தத் தங்கம் ரூ.42 இலட்சம் மதிப்புள்ளது என சுங்கத்துறை கணக்கிட்டுள்ளது. இதுவும் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் அழிப்பு
நேற்று (08.06.2022) போதைப் பொருள் ஒழிப்பு நாள் கொண்டாடப்பட்டது. கடந்த காலங்களில் நாடெங்கிலும் சுங்கத்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மொத்தம் 44,000 கிலோ அரசின் கைவசம் இருந்தன . மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இவையனைத்தும் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது. 44,000 கிலோ போதைப் பொருட்கள் நாட்டின் 14 வெவ்வேறு இடங்களில் அழிக்கப்பட்டன. இவற்றில் ஆறு இடங்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இந்த செயல்முறை நடைபெற்றது. காணொளிக் காட்சி வழியே நிதியமைச்சர் முன்னிலையில் கல்கத்தாவில் 1316.823 கிலோ கஞ்சா & 59789 பைன்செடைல் பாட்டில்கள் போன்றவையும் அழிக்கப்பட்டன.
பீகார் மாநிலம், பாட்னாவில் போதைப்பொருள் அழிவு நாளின் ஒரு பகுதியாக, 1419 கிலோ கஞ்சா உட்பட ரூ.275.8 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சரின் மெய்நிகர் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக கர்நாடக மாநிலம் தும்கூரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின்
மற்றும் சுங்கத்துறை முன்னிலையில் அழிக்கப்பட்டது.
மராட்டிய மாநிலம், புனேவின் அப்புறப்படுத்துதல் & வருவாய் புலனாய்வு இயக்குநரகம் முன்னிலையில் புனே சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட 2439 கிலோ போதைப்பொருட்களை ரஞ்சன்கானில் உள்ள மகாராஷ்டிரா என்விரோ பவர் லிமிடெட் இல் அதிநவீன பிளாஸ்மா வாயுவாக்கம் மூலம் எரியூட்டி போதை மருந்துகள் அழிக்கப்பட்டன.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள சுங்க (தடுப்பு) ஆணையரால் கைப்பற்றப்பட்ட 2871.68 கிலோ கஞ்சா மற்றும் 146.90 கிலோ சரஸ் ஆகியவை எஸ்எம்எஸ் வாட்டர்கேட் மெடிவேஸ்ட் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிடெட் இல் எரிக்கப்பட்டன.