வருகிற 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடைகால விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை வருகிற 12ம் தேதியோடு முடிவடைந்து 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கொரோனா கால கட்டத்திற்கு பின், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்படுவதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகள் பள்ளிகளில் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் வர்ணம் பூசுதல், தூய்மை பணிகள் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறன.
பள்ளிகள் சீரமைப்பு
இந்நிலையில், பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். ‘இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் தீவிரமாக தூய்மை பணியில் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது’ என கூறினார்.
பெற்றோர் – ஆசிரியர் சங்கம்
‘பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகள் நடத்த வேண்டும். வகுப்பறைகள், ஆய்வு கூடம், பள்ளி கழிவறைகள் தூய்மையாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் எந்தவித உடற்பயற்சி செய்யாமல் இருந்து வருகின்றன. எனவே விளையாட்டு மைதானம் குழந்தைகள் விளையாடும் அளவுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து இருக்க வேண்டும். பள்ளி கட்டடம் மற்றும் மதிய உணவு கூடம் ஆகியவை தூய்மைப்படுத்தப்பட்டு வெள்ளையடித்து இருக்க வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள்
பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தினர் இதில் இணைந்து செயல்பட வேண்டும். பல தலைமை ஆசிரியர்கள் இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள் என்பது அறிந்ததே. பல தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை தான் வீடுகளை போன்று தூய்மையாக வைத்து கொள்கிறீர்கள். இது போன்று சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு குடியரசு தினம் விழா அன்று விருதுகள் வழங்கப்படும்’ என தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.