அரசியல்உலகம்சமூகம்பயணம்

தமிழக மீனவர்களுக்கு செப்டம்பர் 6ம் தேதி வரை சிறை !

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நீதிமன்றம்

நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 22ம் தேதி கடலுக்கு 10  மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அங்கு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை முல்லைத்தீவு அருகே கைது செய்தது படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த மீனவர்கள் இலங்கையில் உள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செப்டம்பர் 6ம் தேதி விசாரணை செய்யப்படும் என் கூறியுள்ளனர். தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்வது மீனவர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தகியுள்ளது.

Related posts