தேமுதிக தலைவர் விஜயகாந்த் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் வாழ்த்து
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா, தமிழிசை சௌந்தராஜன், கனிமொழி எம்.பி, நடிகர் சரத்குமார், பாஜக அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று பிறந்தநாள் காணும் ஆருயிர் நண்பரும், உடன்பிறவா சகோதரரும், தேமுதிக தலைவருமான கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வில் அனைத்து வளமும், நலமும் பெற்று, மென்மேலும் பல வெற்றிகள் கண்டு மகிழ்வுடன் வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். @iVijayakant pic.twitter.com/LhJhUaALcO
— R Sarath Kumar (@realsarathkumar) August 25, 2022
தேமுதிக நிறுவனத்தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். pic.twitter.com/rIgstPZzoq
— Vetrikumaran (@Vetrikumaran7) August 25, 2022
தே.மு.தி.க நிறுவனர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
அவர் முழு உடல் நலத்தோடு மக்கள் சேவையை இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன். pic.twitter.com/pzVaoRv22k
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 25, 2022
70வது பிறந்தநாள் காணும் தே.மு.தி.க நிறுவன தலைவர், நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணியாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @iVijayakant
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 25, 2022
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி முன்னாள் தலைவருமான அன்பு சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்கள் தனது எழுபதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
— V K Sasikala (@AmmavinVazhi) August 25, 2022
அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.(2/2)#Vijayakant
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 25, 2022
என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான @iVijayakant அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல் நலம் பெற்று – துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) August 25, 2022

