அரசியல்சமூகம்தமிழ்நாடு

பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு !

பருவமழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகளின் விவரங்களை அனுப்ப வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி 

சென்னையில் கடந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது. இதன் காரணமாக சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன் காரணமாக இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாகவே மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்ப்போது சென்னை மாநகரம் முழுவதும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து வார்டு உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை இந்த மாத இறுதிக்குள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Related posts