அறிவியல்

கிரகண வகைகளும் அறிவியல் உண்மைகளும்

கிரகணம் என்றால் என்ன? இது ஒரு வானவியல் நிகழ்வு. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.

கிரகண வகைகள் :
முழு சூரிய கிரகணம் :

சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனப்படும்.முழு சூரிய கிரகண நேரம் அதிக பட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே. ஒரே இடத்தில் 360-410 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். சூரிய ஒளி முழுமையாக மறைக்கப்படுவதால், இருட்டியது போன்ற நிகழ்வு ஏற்படும்.

சூரியன் கிரகணத்தின் போது சூரியன் வளையமாகத் தெரிந்தால், அது வளைய/கங்கண கிரகணம்( Annular Eclipse) என்று அழைக்கப்படும். இது சந்திரன் பூமிக்கு வெகு தூரத்தில் இருக்கும்போது ஏற்படும்.

பகுதி சூரிய கிரகணம் :

எப்போதும் சூரியன் முழுமையாக மறைக்கப்படவே மாட்டாது. சூரிய ஒளி குறையுமே தவிர வெளிச்சம் இருக்கும். இது எல்லா இடங்களிலும் ஏற்படும்.

ஹைபிரிட்கிரகணம் (Hybrid Eclipse):

இதில் இரண்டு வகை கிரகணக் கலப்பு ஏற்படுவதால் இதனை ஹைபிரிட்கிரகணம் என்கிறோம். இதில் முழு சூரிய கிரகணம் , வளைய சூரிய கிரகணமாக மாறும்.

சூரியன் 7 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. சந்திரன் 5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது .பூமி 23.5 டிகிரி சாய்வாக சுற்றுகிறது. இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் 90 டிகிரியில் நின்று ஒன்றை ஒன்று நேரிடையாக மறைக்கும் போதுதான் கிரகணம் ஏற்படுகிறது.

வளைய/கங்கண கிரகணம் எப்போது ஏற்படும்?

சந்திரன் பூமியிலிருந்து தூரத்தில்  இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால், சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைக்காது. சூரிய பரப்பின் உட்பக்கத்திலேயே சந்திரனின் நிழல் விழும்.

அப்போது, சூரியனின் விளிம்பு மட்டும் வெளியே தெரியும். இதனை கங்கண கிரகணம் என்று சொல்லுகின்றனர். இந்த வளையத்தை ஆங்கிலத்தில் Ring of Fire என்றும் அழைக்கின்றனர்.

 

Related posts