அறிவியல்

பாதரசம் என்னும் அறிவியல் அதிசயம் – நன்மைகளும் தீமைகளும்

ஓர் ஆண்டில் இந்தியாவில் மட்டுமே 2 ஆயிரம் டன் பாதரசம் உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் இன்று பயன்படுத்தப்படும் வெவ்வேறு விதமான 3 ஆயிரத்தும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்க பாதரசம் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது.

ஆனால் பாதரசம் ஏற்படுத்தும் பாதிப்புகள் சுற்றுச் சூழலில் மட்டுமல்ல, உடல் நலனிலும் தலைமுறை தலைமுறையாய் தொடர்பவை ஆகும் என்பது வேதனைக்குரிய உண்மை ஆகும்.

நீர்ம நிலையில் உள்ள ஒரே கன உலோகம் பாதரசம் ஆகும். பாதரசம் வெண்மை நிறமுள்ளதாக இருக்கின்றது. இது இங்குலிகத்தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது.

இது பளுமானி, அழுத்தமானி, தெர்மாமீட்டர் ஆகியவற்றால் நீர்மமாக நிரப்பப்படுகின்றது. பூச்சி மருந்துகள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பல்புகள் ஆகியவற்றின் உற்பத்தியில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.

பாதரசம் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் குளோரைடு கரைசலுடன் பொட்டாசியம் அயோடைடை சேர்க்க மெர்க்குரிக் அயோடைடு உருவாகின்றன.

பாதரசம் புற ஊதாக்கதிரின் மூலமாக செயல்படுகின்றது. பாதரச ஆவி விளக்கின் குமிழில் உள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீல நிற ஓளியைத் தருகின்றது. இந்த விளக்கு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகின்றது. மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.

 

மறைந்திருக்கும் ஆபத்துகள் :

பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன. எனினும் பாதரசம் விஷத்தன்மை மிக்கது. பாதரசத்தால் தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது.

மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன.

பாதரசம் போன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான வேதிப் பொருட்கள் நன்மையும் தீமையையும் கொண்டுள்ளன என்பதில் விஞ்ஞான உலகம் குழம்பிப் போய் உள்ளது.

Related posts