அறிவியல்

பூமியின் வேகம் குறைந்துகொண்டே வருகிறதா ?

சூரிய குடும்பத்தில் ஒவ்வொரு கோளும் மாறுபட்ட வேகத்தில் சுற்றுகின்றன. பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரத்தை  எடுத்துக்கொள்கிறது. ஆனால் போகப்போக இந்த நேரம் கூடப்போகிறது .

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு நாள் என்பது 26 மணி நேரமாக மாறலாம். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் குறைந்துகொண்டே வருவதனால் இது நடக்கலாம்.

அனைத்து கோள்களும் தூசும் காற்றும் ஒருங்கிணைந்ததனால் உருவானவை தான். 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தூசும் காற்றும் ஒருங்கிணைந்து தட்டுப்போன்ற அமைப்பு உருவானது. அந்த சமதள தட்டுப்போன்ற அமைப்பு வேகமாக சுற்ற அதன் நடுவில் சூரியன் உருவானது.

மீதமுள்ள அமைப்புகள் இணைந்து கோள்களாக உருவெடுத்தன. இப்படி உருவான காலகட்டத்தில் சூரிய குடும்பம், பெரிய பாறைகளும் தூசுகளுமாகத்தான் இருந்தன. காலப்போக்கில் அவை பெரிய கோள்களால் ஈர்க்கப்பட்டு ஒன்றிணைந்தன.

இப்படி இயக்கத்தில் இருந்த ஒரு அமைப்பில் இருந்து கோள்கள் உருவானதால் தான் இன்னமும் அதே இயக்கத்தோடு இருக்கின்றன. புற விசைகள் பெரிதாக செயல்படாதபோது அந்த இயக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

பூமி உருவான காலகட்டத்தில் இப்போது இருப்பதை விடவும் பூமி மிக வேகமாக சுழன்று இருக்க வேண்டும். அப்போது ஒருநாள் என்பது வெறும் 6 மணி நேரமாகத்தான் இருந்திருக்கும்.

பூமி சுற்றும் போது பூமிக்கும் நிலவுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு விசை மோதல்களால் தான் கடலில் அலை எழுகிறது. அப்படி உராய்வு ஏற்படும்போது பூமியின் சுழலும் வேகம் குறைகிறது. எந்த அளவிற்கு அது இருக்கும் எனில் அடுத்த நூறாண்டுகளுக்கு பிறகு தன்னைத்தானே பூமி சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மில்லி நொடிகள் கூடுதலாக இருக்கும்.

Related posts