இந்திய அறிவியல் வரலாற்றில் 1975ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அன்று இந்தியாவின் கனவை ஒரு வின்னோடம் சுமந்து சென்று வெற்றிக்கரமாக அந்த கனவை சரித்தரமாக மாற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நாள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சார்ந்த 50 அறிவியல் விஞ்ஞானிகள் ஒன்று கூடி ரஷ்யாவின் சோவியத் செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து ஒரு ராக்கெட்டை ஏவினர். அந்த விண்ணோடம் ஏப்ரல் 9, 1975ம் ஆண்டில் கொண்டு சென்று செயற்கை கோள் தான் ஆர்யப்பட்டா.
இந்தியாவின் முதல் கணிதவியலாளர் மற்றும் வானியலாளராக அறியப்படுகின்றன ஆர்யப்பட்டாவின் பெயரை, இந்த செயற்கோளுக்கு வைக்கப்பட்டது.

5வது நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்யப்பட்டா சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணத்தின் நிகழ்வுகளை சரியாக கணித்து கூறி, இந்தியாவின் விஞ்ஞான சரித்திரத்தில் இடம்பிடித்தார்.
முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஆர்யப்பட்டா, காஸ்மோஸ் – 3எம் என்ற ராக்கெட்டால் வின்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது. 360 கிலோ கிராம் எடை கொண்ட இது 26 முனைகளுடன், 1.4 விட்டம் அளவில் தயாரிக்கப்பட்டது.
ஆர்யப்பட்டாவின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை தவிர அனைத்து பேனல்களுமே சூர்ய மின்கலங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதனால் ஆர்யப்பட்டாவால் 46வால்ட் மின்சாரத்தை உற்பத்திசெய்துக்கொள்ள முடியும்.

பூமியின் அயணி மண்டலத்தில் (ionosphere) இருக்கக்கூடிய நிலைகளை ஆராயவும், நியூட்ரான்கள், சூர்யனிலிருந்து வெளிப்படும் காமா கதிர்கள் ஆகியவற்றை அளவீடுசெய்யவது ஆர்யப்பட்டாவின் பணியாக இருந்தது.
மேலும் இது வானியல் எக்ஸ்-ரேக்களின் செயல்திறனை கண்டறிவதும் இதனுடைய முக்கிய பணியாக இருந்தது.
சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின் முதல் நான்கு நாட்கள் ஆர்யப்பட்டாவின் பணி சிறப்பாகவே இருந்தது. ஆனால் திடீரென்று ஏற்பட்ட மின்சார விநியோகக் கோளாறால், 5வது நாளில் செயல்பாடுகள் அனைத்தும் தோல்வியடைந்து, ஆர்யப்பட்டாவிலிருந்த அனைத்து கருவிகளும் செயலற்று போயின.
மின்சார விநியோகம் தடைபடும் வரை பெங்களூரிலுள்ள இஸ்ரோவின் தலைமை அலுவலகத்தில் ஆர்யப்பட்டா சில தகவல்களை அனுப்பிவைத்தது.
தகவல்களை எந்த இடையூறும் இல்லாமல் பெற, இஸ்ரோ அலுவலகத்திலிருந்த ஒரு கழிவறையை தகவல் பெறும் மையமாக மாற்றியது.

செயலிழந்து நின்றாலும், ஆர்யப்பட்டா பூமியின் சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட 1992ம் ஆண்டு வரை சுற்றி வந்தது. 17 ஆண்டுகள் கழித்து 1992 பிப்ரவரி 11ம் தேதி ஆர்யப்பட்டா பூமியின் மேற்பரப்பில் வெடித்து சிதறியது.
ஆர்யபட்டா செயற்கைகோளின் வெடித்த துகள்கள், பாகங்கள் அனைத்தும் மீண்டும் வளிமண்டலத்திற்குள் பிரேவசித்து, இந்தியாவின் கனவு அன்றே மறைந்தது.

இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு அச்சாரம் அமைத்து கொடுத்த ஆர்யப்பட்டா செயற்கைகோளை நினைவுகூறும் விதமாக, இந்திய அரசு அஞ்சதல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகளில் ஆர்யபட்டாவின் படங்கள் இடம்பெற செய்து கவுரவப்படுத்தியது.

