திருநெல்வேலி: நெல்லையில் மாணவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சாதி மோதலில் 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள் செயலப்படவில்லை. இந்நிலையில் கொரோனா குறைந்து இப்போதுதான் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அரசுப் பள்ளி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பள்ளக்கால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயலப்பட்டு வருகிறது . அந்த பகுதியைச் சுற்றியுள்ள பெரும்பாலான மாணவர்கள் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே சாதி ரீதியான சண்டை வந்து இருக்கிறது.
சாதி அடையாளம்
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தன் சாதி அடையலாமான சாதி கயிறுகளைக் கட்டி வந்து இருக்கிறார்கள். இதனையடுத்து இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு உள்ளனர்.
மரணம்
ஒரு பிரிவினரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றொரு பிரிவினரிடம் தனியாக சிக்கியுள்ளார். அந்த மாணவரை கொடூரமாகத் தாக்கி உள்ளனர். மேலும், கற்களைக் கொண்டும் அந்த மாணவரைத் தாக்கியதால் படுகாயமடைந்த அந்த மாணவர், சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த மாணவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர்.
போலீஸ் விசாரணை
சாதி மோதலில் ஈடுப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவரின் மரணம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின் முதற்கட்டமாக 3 மாணவர்களை கைது செய்து, அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அரசு நடவடிக்கை
தமிழ் நாட்டில் பல பகுதிகளில் குறிப்பாக கிராமங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சாதி வன்முறைகளை தடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.