சமூகம்தமிழ்நாடு

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் !

சென்னை: செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவி ஒருவர் ராக்கிங் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

ராக்கிங்

சில வருடத்திற்கு முன்புவரை ராகிங் என்ற கொடுமையான கலாச்சாரம் எல்லா கல்லூரிகளிலும் இருந்தது. ராக்கிங்கினால் உயிர் இழந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இதை தடுக்க கல்லூரிகளும், அரசும் பல நடவடிக்கைகளை முன் எடுத்து. இதன் விளைவாக ராக்கிங் கலைச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து. ஆனால் முற்றிலும் ஒழியவில்லை.

அதேசமயம் தற்கொலைகளும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் சட்ட கல்லூரி மாணவியின் தற்கொலை மிக பெரிய அதிர்ச்சியே ஏற்படுத்தியுள்ளது. எங்கே மீண்டும் ராக்கிங் கலாச்சாரம் தொடங்கிவிடுமோ என்ற பயமும் கல்லூரிகளில் வந்துள்ளது.

கல்லூரி மாணவி தற்கொலை

செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவி ரம்யாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொந்த ஊர் திருவள்ளுர் மாவட்டம் புதூர் கிராமம். ரம்யா செங்கல்பட்டு சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். ரம்யாவின் கல்லூரியை சார்ந்த சில மாணவிகள் ரம்யாவை ராகிங் செய்துவந்தாக சொல்லப்படுகிறது. தரை குறைவாக பேசியும், கிண்டல் செய்தும் ரம்யாவை தொல்லை செய்து வந்துள்ளனர் அந்த மாணவிகள்.

இதைபற்றி ரம்யா தனது தந்தையிடம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி சொல்லி அழுதுள்ளார். மேலும், நான் வீட்டுக்கே வந்துவிடுகிறேன் என்றும் கூறியுள்ளார். அதற்கு அவர் தந்தை வீட்டுக்கு வா பேசிக்கொள்ளலாம் என்று பதிளித்துள்ளார்.

ஆனால் தேர்வுகள் முடிந்தும் ரம்யா வீட்டுக்கு செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் விடுதியிலேயே தங்கிருந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று ரம்யா விடுதியில் தனது அறையிலே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு காவல்துறையினர் ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அன்புமணி வேண்டுகோள்

இதுகுறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞரணியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர், ‘ரம்யாவின் தற்கொலை வழக்கை முறையாக விசாரிக்காமல் காவல்துறை வழக்கை மடைமாற்றம் செய்வதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. மேலும், ரம்யாவின் குடும்பத்தாருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கவேண்டும்.


இந்த வழக்கில் நீதிதுறை குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், அதை தமிழக அரசு உறுதிசெய்யவேண்டும் என்றும் கூறிருந்தார். அதுமட்டுமின்றி கல்லூரிகளில் ராகிங் தடுக்கும் துறை முறையாக செயல்படுகிறதா ? என்றும் அவற்றை இன்னும் வீரியமாக செயல்ப்படுத்த வேண்டும்.

இனி ராக்கிங் தொல்லையால் ஒரு மாணவர்களின் உயிர் இந்த மண்ணிலே போகக்கூடாது’ என்றும் கூறினார்.

Related posts