சூரியன் ஏதேனும் இயற்கை காரணத்தால் காணாமல் போயிருந்தால் என்ன நடக்கும்? இதுவரை இப்படி ஒன்று நடக்கவில்லை ஆகையால் என்ன நடக்கும் என்பதனை மிகச்சரியாக கூற முடியாது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஆனால் நம்மிடம் இருக்கும் அறிவியல் கோட்பாடுகளின்படி மிகப்பெரிய மாற்றங்கள் நடைபெறலாம் என அனுமானித்து இருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றினை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.
கோள்கள் சுற்றுவது நின்றுவிடும்
அண்டத்தில் இருக்கின்ற ஒவ்வொன்றுமே நேர்கோட்டில் மிக வேகமாக பயணிக்கும். உதாரணத்திற்கு வால்நட்சத்திரங்களை கூறலாம். ஒன்பது கிரகங்களும் சூரியனை சுற்றிவருவதற்கு முக்கிய காரணம், சூரியனின் ஈர்ப்பு விசை தான்.
பூமி உள்ளிட்ட கோள்கள் நேர் கோட்டில் செல்ல முயற்சிக்கும் போது சூரியனால் ஈர்க்கப்படும். ஈர்ப்பு – விலக்கு விசையின் காரணமாக குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் கோள்கள் சுற்றிவருகின்றன.
ஒருவேளை சூரியன் காணாமல் போய்விட்டால் கோள்கள் வட்டப்பாதையில் சுற்றுவதை நிறுத்திவிட்டு அது அது அதன் போக்கில் மிக வேகமாக பயணிக்க ஆரம்பித்துவிடும் .
உயிர்கள் வாழ்வது கடினம் :
உயிரினங்கள் பூமியில் உயிர்வாழ்வதற்கு காரணம் சூரியனுக்கும் பூமிக்கு இருக்கின்ற இடைவெளி தான். அருகில் இருந்திருந்தால் வெப்பநிலை அதிகமாகியிருக்கலாம். தொலைவில் இருந்திருந்தால் குளிர்ச்சி அதிகமாகியிருக்கலாம் . இந்த இரண்டும் அல்லாமல் சரியான இடைவெளி இருப்பதனால் உயிர்வாழ ஏற்ற வெப்பநிலையோடு வாழுகிறோம் .
சூரியன் காணாமல் போய்விட்டால் பூமியின் வெப்பநிலை படிப்படியாக குறைந்துகொண்டே வரும். சில நாட்களில் மைனஸ்களில் வெப்பநிலை சென்றுவிடும் . கடல் பரப்பு முழுவதுமாக உறைந்துவிடும் . இப்படிப்பட்ட சூழலில் உயிரினங்கள் உயிர்வாழ்வது மிகக்கடினம் .
அடுத்தது தாவரங்கள் அனைத்துமே உயிர்வாழ சூரிய சக்தி அவசியம் . அது கிடைக்காவிட்டால் தாவரங்கள் அனைத்தும் அழிந்துவிடும் . மற்ற உயிரினங்களின் உணவு முற்றிலும் தாவரங்களையே சார்ந்திருப்பதனால் அவையும் அழிந்துவிடும்
வின்மீன்களை காண இயலாது
நிலவு உள்ளிட்ட அனைத்திற்குமே தானாக ஒளிர்கின்ற ஆற்றல் கிடையாது . சூரியனில் இருந்து வருகின்ற ஒளியினை பிரதிபலிப்பதனால் தான் கிரகங்களும் நட்சத்திரங்களும் நம் கண்களுக்கு புலப்படுகின்றன.
சூரியன் காணாமல் போனால் நிலவு உள்ளிட்ட எவற்றையும் பார்க்க இயலாது. சூரிய ஒளியானது 8 நிமிடம் 30 நொடிகளுக்கு பிறகே பூமியை வந்தடைகிறது . ஆகவே சூரியன் காணாமல் போன உடனே இந்த மாற்றங்களை நம்மால் உணர இயலாது . 9 நிமிடங்களுக்கு பிறகுதான் நமக்கே தெரியும் .