இந்தியாசுற்றுசூழல்தமிழ்நாடு

தமிழகத்தில் மின்வெட்டு அதிகரிக்கும்! – தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!

தமிழகத்தில் மின்வெட்டு நேரங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாகுறையின் எதிரொலி.

தமிழகத்தில் மின்வெட்டு

எந்த கட்சி ஆட்சியமைத்தாலும் தமிழ்நாட்டில் மின் தடுப்பாட்டுக்கு எந்த ஒரு முடிவையும் இன்று வரை கொண்டுவர இயலவில்லை. அதிலும் கோடைகாலம் என்றால் பல மணி நேரம் மின்வெட்டு என்பது தமிழக மக்களுக்கு பழகி போன ஒன்று. இந்த கொடுமை இப்போது அமைந்துள்ள திமுக ஆட்சியிலும் விடியல் தீர்வு வரவில்லை.

தூத்துக்குடி அனல்மின் நிலையம்

கடந்த சில நாட்களாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாட்டால், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலமாக நிலக்கரி கொண்டு வரப்பட்டு 5 யூனிட்டிகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இதனையடுத்து, அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு அதிகமானதின் காரணமாக 1,2,3 ஆகிய யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மின்வெட்டு நேரங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வந்துள்ளது.

 

நிலக்கரி பற்றாகுறை

தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில்
கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் மின் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது நிலவி வரும் நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு, மத்திய அரசின் மின்சாரம், நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய துறைகளின் சரியான ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசு தங்களுக்கு முறையாக நிலக்கரி வழங்கபடுவதில்லை என மாநில  அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்கள் அவதி

மின் உற்பத்தி பாதிப்பால் அடிக்கடி மின் வெட்டும் ஏற்படுகிறது. ஏற்கனவே கோடை வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில் அடிக்கடி மின்வெட்டும் ஏற்படுவதால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்தியாவின் மின்சார தேவை பெரும்பாலும் அனல்மின் நிலையங்கள் வாயிலாக பெறப்படும் நிலையில் , இந்தியாவில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களிலும் இன்னும் சில நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related posts