கன்னட சினிமாவில் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, 1000 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் கே. ஜி. ஃப் 2. மேலும், ஓ.டி.டி – யில் ஒரு புதிய சாதனையே பதிவு செய்துள்ளது.
வசூல் வேட்டை
கடந்த மாதம் தமிழ் புத்தாண்டிற்கு நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் மற்றும் கன்னட படமான கே. ஜி. ஃப் படத்தின் இரண்டாம் பாகமும் பெரும் எதிர்பார்ப்பில் வெளியானது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனகளை பெற்றது. ஆனால் கே. ஜி. ஃப் 2 பாக்ஸ் ஆபிஸில் சக்கப்போடுப் போட தொடங்கியது. இந்த படம் சுமார் 1000 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
போட்டி போடும் யஷ்
கே. ஜி. ஃப் பாகம் 1 மற்றும் 2ல் தனது நடிப்பில் யஷ் மிரட்டி இருப்பார். அவர் ஹிந்தி சினிமாவையும் விட்டுவைக்கவில்லை அங்கேயும் தனது வெற்றி கொடியை பதித்துள்ளார்.இதனால் சில நாட்களாகவே தென்னிந்திய சினிமாவுக்கும், இந்தி சினிமாவுக்கும் ஒரு பனிப்போரே ட்விட்டரில் நடந்தது. இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய நடிகர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
புதிய சாதனை
பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளிவந்து பின்பு ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியான பிறகு மக்களின் கவனத்தை ஈர்த்த படம் கே. ஜி. ஃப். அதனையடுத்து கடந்த மாதம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான அந்த படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வசூலை அள்ளிய நிலையில், முதல் பாகத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைமே இந்த படத்தின் ஓடிடி உரிமத்தையும் 350 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக திரையரங்குகளில் மட்டுமில்லாமல் ஓடிடிலும் அதிக விலைக்கு உரிமம் பெற்ற படங்களில் ஒன்றாக கே. ஜி. ஃப் 2 இடம்பெற்றுள்ளது.
ஓடிடி யில் RRR, கே. ஜி. ஃப் 2 போன்ற படங்கள் ஜூன் மாதத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.