செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபிரியர்கள் மறியல்
செங்கல்பட்டு, மதுராந்தகம் அடுத்துள்ளது திருவாத்தூர் கிராமத்தில் 4 ஆண்டுகளாக மதுக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தின இரவு இந்த மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இச்செய்தியை அறிந்த மது பிரியர்கள் மதுக்கடையை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கூறி மதுராந்தகம் டூ கூவத்தூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அரசு பேருந்தை ஒன்றை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அணைக்கட்டு காவல் நிலையத்திற்கும், வருவாய்த்துறை அதிகரிக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு வந்த காவல்துறையும் மற்றும் வருவாய்த்துறை அதிகாரியும் மறியலில் ஈடுபட்ட மது பிரியர்களிடம் கடை அகற்றப்படமாட்டாது என வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து மதுபிரியர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

