பணகுடி பஜாரில் உள்ள கடைகளுக்கு புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த மூன்று நபர்களை வள்ளியூர் ஏஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
புகையிலைப் பொருட்கள் விற்பனை
நெல்லை, பணகுடி பேருந்து நிலையம் எதிரே உள்ள கடை வீதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக பணகுடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வள்ளியூர் ஏஎஸ்பி சமாய் சிங் மீனா தலைமையிலான தனிப்படை போலீசார் ரகசியமாக அந்த கடையை நோட்டமிட்டு வந்தனர். அப்போது தனிப்படை போலீசார் ஒருவர் அவர்களிடம் புகையிலை வாங்குவது போல் அவரிடம் பேசியுள்ளனர். மேலும், அதிகளவில் தேவைபடுவதாகவும் கூறியுள்ளனர். உடனே அவர்கள் மூன்று பேறும் வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரி பகுதியில் ஒரு வீட்டில் புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கேசவனேரி சென்ற தனிப்படை போலீசார் 500 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறறும் பான்மசால பொருட்களை பறிமுதல் செய்து மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

