அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் கூட்டம் நடத்தியதாக பாமகவினர் மீது தொடுக்குப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு.
வழக்கு ரத்து
சென்னையில் கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மகாபலிபுரம் அருகே இரவு 10 மணிக்கு மேல் பொதுகூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஆகியோர் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்குப்பதியப்பட்டது. வழக்கை எதிர்த்து, அன்புமணி ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் உள்நோக்கத்திற்காக வழக்கு தொடரப்பட்டது என்றும் உரிய சட்ட விதிகளை பின்பற்றவில்லை என பாமக சார்பில் வாதாடப்பட்டது. பின்னர் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

