உலகம்சமூகம்

எப்பதான் முடியும் ரஷ்யா உக்ரைன் போர்.. வரலாற்று துயரத்தில் உக்ரைன்!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பதை பல ஆண்டுகளாக எச்சரித்து வந்த ரஷ்யா, கடந்த பிப் 24 அன்று வெளிப்படையாக தாக்குதல் நடத்த தொடங்கியது. ராணுவ பலம்பொருந்திய ரஷ்யா சிறிய நாடான உக்ரைன் மீது போரை அறிவித்து தாக்குதல் நடத்தியது உலக நாடுகள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. எதையும் பொருட்ப்படுத்தாத ரஷ்ய ராணுவம் உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்கியது.

உக்ரைன் மக்கள் வரலாற்று துயரத்திற்கு தள்ளப்பட்டனர். தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு, அண்டை நாடுகளுக்கு அகதியாக இடம்பெயர்ந்தனர். ஏராளமான பொதுமக்கள் ரஷ்ய ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டனர்.

ரஷ்யாவின் செயல்பாடுகளை ஏற்காத உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தனர். போரை நிறுத்த ஐ.நா மன்றத்தை கூட்டி ஆலோசனை நடத்தினர். எதிலும் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத ரஷ்யா நாளுக்கு நாள் தனது தாக்குதலை தீவிரப்படுத்திக்கொண்டே இருந்தது. பள்ளிகள் கல்லூரிகள் என மக்கள் கூடி இருந்த அனைத்து இடத்திலும் குண்டுகள் வீசியது.

இந்த போரை பேச்சு வார்த்தைகள் மூலம் மட்டுமே நிறுத்த முடியும் என்று நினைத்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவோடு பேச்சுவார்த்தை நடத்த தயாரானார். உக்ரைன் ரஷ்யா இடையே பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது.

பேச்சு வார்த்தையில், ரஷ்யா கூறும் கட்டளைகளை உக்ரைன் ஒருபோது ஏற்காது, உக்ரைன் மக்களை அடிமையாக்கும் ஒப்பந்தங்களை நான் புறக்கணிக்கிறேன் என்ற நிலைப்பாட்டை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எடுத்தார். இதனால், நடைபெற்ற அனைத்து சமாதான பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு துருக்கியில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே சில உடன்பாடுகள் ஏற்பட்டன. உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிறுத்திவைக்கபட்டிருந்த தனது ராணுவ படைகளை ரஷ்ய பின்வாங்கியது. இதனால் விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க பட்டது. ஆனால், உக்ரைன் ரஷ்சிய ராணுவத்தை குறிவைத்து தாக்கி வருவதாகவும், ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவ முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இது நிலைமையை இன்னும் மோசமாக்கியது.

இந்நிலையில், ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தினால், கீவ் நகரில் உள்ள கண்ட்ரோல் சென்டர்ஸை (command centres) குறி வைத்துத் தாக்குதலைத் தொடங்குவோம் என்று ரஷ்ய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “உக்ரைன் ராணுவம் நாச வேலைகளில் ஈடுபடவும், ரஷ்ய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தவும் முயல்கிறது. இது போன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால், ரஷ்ய ராணுவம் கீவ் கமேண்டோ மையங்களில் தாக்குதல் நடத்தும்” என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் முக்கிய துறைமுகமான மரியுபோல் முழுக்க முழுக்க ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts