இந்தியாசமூகம்

முன்னாள் பிரதமர்களின் நினைவாக அருங்காட்சியகம் – பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்!

முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவுக்கு டெல்லியில் தீன் மூர்த்தி எஸ்டேட்டில் நினைவு இல்லம் உள்ளது. நேரு பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் அந்த நினைவு இல்லத்தில் உள்ளன.நேருவின் தியாகத்தை அந்த நினைவு இல்லம் பிரதிபலிப்பது போல முன்னாள் பிரதமர்கள் அனைவரது தியாகத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டார். இதையடுத்து தீன் மூர்த்தி வளாகத்தின் ஒருபகுதியில் முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும் அருங்காட்சியகம் ஒன்று கட்டப்படும் என்று 2018-ல் அறிவித்தார்.

புதுடில்லி தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் இந்திய பிரதமர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அருங்காட்சியகம் திறக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து ரூ.271 கோடி செலவில் 10,975.36 ச. மீ. பரப்பளவில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

14 முன்னாள் பிரதமர்களின் அபூர்வப்படங்கள், குறிப்புகள், நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன. அவர்கள் பேசிய ஆடியோ, வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன. அதை பொதுமக்கள் ரசிக்க முடியும்.

அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து, பொதுமக்களின் பார்வைக்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட்டது.

Related posts