உலகம்

இந்தியா நினைத்தால் போரை நிறுத்த முடியும்…அமெரிக்கா அறிக்கை!

உக்ரைன்: உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் போரை நிறுத்தாத ரஷ்யா இப்போது உக்ரைனின் 780 அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளது. பல்லாயிரம் கணக்கான பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது போரை நடத்திவரும் ரஷ்யா நாளுக்குநாள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. வான்வழி தாக்குதல், வேக்கம் பாம்ப் பயன்படுத்துதல் என தாக்குதல் முறையையும் மாற்றிக்கொண்டே  இருக்கிறது. இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தாலும் உக்ரைனில் அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். ரஷ்யா இப்போது பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு கட்டடங்கள் மீதும் குண்டுகள் வீசிவருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது.

சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டது. அதாவது உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும். அங்குள்ள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும் போரை நிறுத்துவதில் ரஷ்ய அதிபர் புதினுக்கு உடன்பாடில்லை என கூறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை இப்போது பொதுமக்கள் மீதும் தொடர்கிறது.

உக்ரைனும் ரஷ்யாவுக்கு உரிய பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றனர். ரஷ்ய படையிலும் உயிரிழப்பு நடந்து வருகிறது. இதுவரை ரஷ்யா படையில்12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தரப்பில் சொல்லப்படுகிறது.

இந்தியா வலியுறுத்த வேண்டும்

போர் தொடங்கியபோது இது சில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்றே அனைவரும் நம்பினார். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா-உக்ரைன் இடையே பொலாரஸ், துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படாததால் போர் நடவடிக்கையை ரஷ்யா தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும் ரஷ்யா போரை நிறுத்த மறுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் பார்வை இப்போது இந்தியாவிடம் திரும்பி இருக்கிறது. இந்தியாவின் நட்பு நாடான ரஷ்யாவை போர் நடவடிக்கையை திரும்பபெறவேண்டி இந்தியா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறிவருகிறது.

Related posts