Editor's Picksதமிழ்நாடு

21 மொழிகளில் பெரியார் சிந்தனைகள் ; அறிவிப்பு வெளியிட்டது அரசு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 2023 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்தார். அதில், காவல்துறைக்கு ரூ.10,285 கோடி ஒதுக்கீடு, புதிதாக 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ₨50 கோடி ஒதுக்கீடு என்பன போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல், திராவிட இயக்கங்கள் தங்களின் முன்னோடியாக கருதுகிற பெரியாரின் சிந்தனை தொகுப்புகளை இந்திய மொழிகள் உள்ளிட்ட 21 மொழிகளில் வெளியிடுவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

தமிழக அரசின் இந்த நிதிநிலை அறிக்கையினை அரசியல் கட்சிகள் பல வரவேற்றும், விமர்சித்தும் வரக்கூடிய சூழலில் பெரியாரின் சிந்தனை தொகுப்புகளை இந்திய மொழிகள் உள்ளிட்ட 21 மொழிகளில் வெளியிடுவதற்கான அறிவிப்பு முக்கிய கவனம் பெற்றுள்ளதுடன், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் பாராட்டவும் பட்டுள்ளது.

முன்னதாக, திமுக ஆட்சியமைந்ததன் பின்னர் நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நான் திராவிட இயக்க வழி வந்தவன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts