பென் ஸ்டோக்ஸ்: வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்த் அணி 5 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிக்கான தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ட்ராவில் முடிந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்த் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்கத்தில் தடுப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திய இங்கிலாந்த் வீரர்கள் பின்பு ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் டெஸ்டில் தனது 25வது சதத்தை அடித்து அசத்தினார். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் தனது 11வது சதத்தை பூர்த்திசெய்தார். அவர் 128 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். அதில் 6 சிக்ஸர்களும் அடங்கும். ஸ்டோக்ஸ் 100 ரன்களை தொட்டபோது வானத்தை பார்த்தபடி தனது இறந்த தந்தைக்கு மரியாதை செலுத்தினார். நீண்ட நாட்களாக அணியில் வாய்ப்பு கொடுக்கப்படாமலும், சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமலும் தடுமாறி வந்த ஸ்டோக்ஸ்சை இந்த சதம் மீண்டும் ப்பார்ம்க்கு கொண்டுவந்துள்ளது.
முதல் டெஸ்ட் ட்ராவில் முடிவடைந்தநிலையில், இரண்டாவது டெஸ்ட்டை வெல்ல இரண்டு அணிகளும் ஆர்வம் காட்டி வருக்கின்றனர். 507 ரன்கள் குவித்து தனது முதல் இன்னிக்ஸ்சை டிக்ளர் செய்தது இங்கிலாந்த் அணி. அடுத்து தனது ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 71 ரங்களுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது.