குஜராத்: இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பழங்கால வரலாறு ஆகிவற்றை மீட்டெடுக்கும் விதமாக 6-12 வது பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது என குஜராத் அரசு அறிவித்துள்ளது.
குஜராத் மாநில அரசு நேற்று மாலை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் பகவத் கீதையின் முக்கியத்துவத்தையும் அதில் இருக்கும் மனித வாழ்விற்கான சாராம்சத்தையும் மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக 6-12 வது பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேக்கப்பட்டுள்ளது.
பழைய இந்தியர்களின் அறிவாற்றல், அவர்களின் வாழ்க்கை முறை, வாழ்வில் அவர்கள் பின்பற்றிய நெறிகள் ஆகியவற்றை அனைத்து மதத்தை சேர்ந்த மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவ, மாணவியர் இடையே ஆரோக்கியமான கருத்துக்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பகவத் கீதையின் மதிப்புகள், கோட்பாடுகள் மற்றும் உயரிய கருத்துக்கள் என்பது எல்லா மதத்தினரும் ஒரு மனிதராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது என அறிவித்த்திருந்தது.
பள்ளி பாடத்திட்டம்
‘6ம் வகுப்பிலிருந்தே பகவத் கீதை தொடர்பான பாடங்கள் மாணவர்களிடம் பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொரு வருட பாட திட்டத்திலும் பகவத் கீதையின் வெவ்வேறு பகுதிகள் இணைக்கப்படும். இதன் மூலம் கீதை மீதான பள்ளி மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும். கீதையின் உயர்ந்த சிந்தனைகள் குஜராத் மாணவர்களை நல் வழியில் சிந்திக்க வைக்கும்’ என்று குஜராத்தின் கல்வித்துறை அமைச்சர் ஜீத்து வாகனி தெரிவித்துள்ளார்.
முதலில் பகவத் கீதையின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டு, அதன்பின் அதில் இருக்கும் மந்திரங்கள், பாடல்கள், கட்டுரைகள் என அதை வைத்து தேர்வுகள், போட்டிகள், வினாடி வினா போன்றவை நடத்தப்படும். மாணவர்களுக்கு தேவையான பகவத் கீதை புத்தகம் அரசு தரப்பில் வழங்கப்படும். பள்ளியில் ஆடியோ வீடியோ மூலமும் வகுப்பு எடுக்கப்படும். இது தொடர்பாக மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
வரவேற்பு
குஜராத்தின் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி காட்சிகள் குஜராத் அரசின் இந்த செயற்பாடுகளை
வரவேற்றுள்ளது. மேலும், பாஜக வினர் முதலில் பகவத் கீதையை படித்து அதன்படி நடக்க வேண்டும், குஜராத் பள்ளிகளில் காலியாக உள்ள பலஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.