தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது இன்று தொடங்கியுள்ள நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 2023 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை பேரவையில் சமர்ப்பித்துள்ளார். அதே சமயம், திமுக அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை என கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள்.
அவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அரசு அதிகாரத்தினை கொண்டு எவ்வித ஆக்கபூர்வமான பணிகளிலும் ஈடுபடாமல் வெறும் விளம்பர செயற்பாடுகளில் ஈடுபட்டு காலத்தை கழிக்கிறார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை, மகளிற்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுமென்ற அறிவிப்பு இடம்பெறவில்லை, கல்விக்கடன்கள் ரத்து செய்வது குறித்த அறிவிப்பு ஆகியன இல்லை. ஆகவே, இது வெற்று – விளம்பர பட்ஜெட் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், அரசுப் பள்ளியில் படித்து மேற்படிப்பு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ₨1000 உதவித்தொகை வழங்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.