சினிமா

அஜித்மேல என்னதான் கடுப்பு….அடிச்சாதான் திருந்துவியா…ப்ளூ சட்டை மாறன் மீது அஜித் ரசிகர்கள் ஆவேசம்!

சென்னை: நட்சத்திரங்களின் படங்களையும் பாரபட்சமின்றி தொடர்ந்து விமர்சித்துவந்த ப்ளூ சட்டை மாறன் இப்போது அஜித், சூர்யா ரசிகர்களுடன் ட்விட்டர் சண்டை போட்டு வருகிறார்.

ப்ளூ சட்டை மாறன்


தமிழ் திரைப்படங்கள் மற்றும் எகிரிய எதிர்பார்ப்புகளோடு வெளிவரும் திரைப்படங்களை நீண்ட நாட்களாக tamil talkies என்ற தனது யூ டியுப் சேனல் மூலம் விமர்சனம் செய்துவந்தவர் ப்ளூ சட்டை மாறன்.இப்போது ஆன்டி இந்தியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராகவும் மாறியுள்ளார். ப்ளூ சட்டை மாறனின் விமர்சன தொனி குறிப்பிட்ட சிலரால் ரசிக்கப்பட்டாலும் பலருக்கு அந்த தொனியில் அவர் பேசுவது பிடிக்காத ஒன்றாகவே இருந்து வருகிறது. அப்பப்போது நட்சத்திரங்களின் படங்களை கடுமையாக விமர்சித்து இணையதள தாக்குதலுக்கு உள்ளாவது அவருக்கு பழக்கப்பட்ட ஓன்று.

கடுமையான விமர்சனம்
அன்மையில் வினோத் இயக்கத்தில் வெளியான அஜித்தின் வலிமை, பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்களை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

கமர்சியல் படங்கள் மீது எப்போதும் அதிகப்படியான விமர்சனங்களை கொட்டி தீர்க்கும் மாறன் இந்த படங்களையும் வச்சி செய்திருந்தார். அப்போது வெளியாகியிருந்த பிரபாஸின் ராதே ஷ்யாம், தனுஷின் மாறன் படைத்தகையும் அவர் விட்டுவைக்கவில்லை.தனக்கே உரிய தொனியில் வறுத்தெடுத்துதார்.

காண்டான அஜித் ரசிகர்கள்
வலிமை படத்தில் அஜித்தின் நடனம் பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல இருப்பதாகவும், நடிகர் அஜித்தின் தோற்றம் பஜன் லால் சேட் போல இருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் விமர்ச்சித்தது அஜித் ரசிகர்களிடம் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

கோபம் கொண்ட அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறன் வெளியே வரவேண்டாம், எங்கள் கண்களில் பட்டுவிட்டால் அடி விழும் என்று எச்சரித்திருந்தனர். நடிகர் அஜித்தின் தீவிரமான ரசிகர்களான ஜான் கொக்கன் மற்றும் ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை விமர்சித்ததை எதிர்த்தனர்.

தாக்கப்பட்டாரா மாறன்

இந்நிலையில் பிவிஆர் தியேட்டரில் ப்ளூ சட்டை மாறன் மீது அஜித் ரசிகர்கள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது உண்மைத்தகவலா என்று தெரியவில்லை. ஆனால், பிவிஆரில் என்ன ஆச்சு? என ப்ளூ சட்டை மாறன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதனால் ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

 

 

 

 

Related posts