மிக உயரிய அங்கீகாரமான குடியரசு தலைவர் கொடி நேற்று தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டது.
உயரிய அங்கீகாரம்
ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு குடியரசு தலைவரின் கொடி மாநில காவல்துறைக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்தியாவில் இதுவரை 10 மாநிலங்கள் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அந்த வகையில், தமிழக காவல்துறைக்கு 2009ம் ஆண்டு இந்த அங்கீகாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து குடியரசு தலைவர் கொடி ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கொடியை வழங்க, அதனை முதலமைச்சர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
The Vice President, Shri M. Venkaiah Naidu presenting the Presidential Colours to the Tamil Nadu Police in Chennai today. @tnpoliceoffl @mkstalin pic.twitter.com/LPdU79I3ev
— Vice President of India (@VPSecretariat) July 31, 2022

