இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருகின்றது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டது. அறிக்கையில், ‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நாட்களை விட குறைஇந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,40,36,275 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் மொத்த எண்ணிக்கை 4,33,65,890 ஆக பதிவாகியுள்ளது. தற்போது நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,43,989 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,26,396 ஆக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இதுவரை 204 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

