ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யவில்லை என்றால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
தடை சட்டம்
ஆன்லைன் ரம்மி நாட்டில் தலைவலியை ஏற்படுத்துகிறது. இதற்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இதனையடுத்து அந்த குழு ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து பரிந்துரை அளித்தது. இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டியது என்பதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.
அன்புமணி
வல்லுனர் குழுவும் இதையே தான் பரிந்துரைத்துள்ளது. இருப்பினும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை ஏற்றுவதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை ஏற்ற வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் பா.ம.க மாபெரும் போராட்டத்தை நடத்தும்’ என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

