பொன்னியின் செல்வன் தமிழர்களுக்கான படம் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
முதல் பாடல்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொன்னி நதி என்ற முதல் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் ஆகியோர் பங்கேற்றனர்.
கார்த்தி பேச்சு
அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கார்த்தி, ‘பொன்னியின் செல்வன் தமிழர்களுக்கான படம். இந்த படத்தை எடுக்க முடியாது என்று அனைவரும் கூறினார்கள். இருப்பினும் 120 நாட்களில் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் படமாக்கி முடித்து விட்டோம். மேலும், இந்த பொன்னி நதி கேட்கும் பொழுது சோழ நாட்டுக்குள்போன உணர்வு வரும்’ என்று கார்த்தி கூறினார்.

