பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க பலரும் முயற்சித்தும், மணி ரத்னம் தான் சாத்தியமாக்கியுள்ளார் என்று நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.
பொன்னி நதி
கல்கி எழுதிய வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். அதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவி
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி என்ற பாடலை படக்குழு நேற்று வெளியிட்டனர். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி, ‘பொன்னியின் செல்வன் படத்தில் மணி சார் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் சார் இசையில் நான் முதல்முறையாக நடித்துள்ளேன்’ என்று கூறினார்.

