மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக நீலாங்கரையில் நீச்சல் வீரர்கள் சிலர் கடலுக்குள் செஸ் விளையாடியுள்ளனர்.
ஆழ்கடல் விளையாட்டு
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கி இந்த மாதம்10ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்த செஸ் ஒலிம்பியாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரவிந்த் என்பவர் சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் பயிற்சி பள்ளி ஒன்றை temple adventure என்ற பெயரில் நடத்தி வருகிறார். இவர் உலக யோகா தினம், சர்வதேச கிரிக்கெட் போட்டி, கடல் தூய்மை போன்றவற்றிற்கு விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் கடலுக்கு அடியில் பல நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், அரவிந்த் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் சென்னையை அடுத்த நீலாங்கரை கடலுக்குள் 60 ஆடி ஆழத்தில் அடியில் ஆழ்கடல் நீச்சல்வீரர்கள் தம்பி உடை அணிந்து செஸ் விளையாடி வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

