தமிழ்நாடுபயணம்

ஆம்னி பேருந்துகளில் புதிய கட்டணம் அறிவிப்பு!

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்படுவது வழக்கம்.

ஆம்னி பேருந்துகள்

இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் போக்குவரத்து துறை இதில் நேரடியாக தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து உரிமைாளர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதிய கட்டணம்

அதில் பொதுமக்களை பாதிக்காத வகையில் நிலையான கட்டணத்தை நிர்ணயிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதன்பெயரில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் புதிய கட்டணத்தை அறிவித்துள்ளனர். பேருந்துகளின் வசதிகளுக்கு ஏற்ப 6 வகையான கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

 

Related posts