புதிய அறிவிப்பு
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரின்ஸ்’. இப்படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இசையமைப்பாளர் தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளிட்டு அறிவித்துள்ளனர்.
#Prince @Siva_Kartikeyan is Coming to Theatres to Light up your Diwali! 🪔💥@anudeepfilm @maria_ryab @manojdft @Cinemainmygenes #Sathyaraj @Premgiamaren @SVCLLP @SureshProdns @ShanthiTalkies @Gopuram_Cinemas @adityamusic @AdityaTamil_ #Prince🕊️ #PrinceFromDiwali2022 pic.twitter.com/REnd3Moxvm
— Shanthi Talkies (@ShanthiTalkies) October 1, 2022

