கர்நாடகாவில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை இறந்து போன தனது கணவர் என எண்ணி நான்கு நாட்கள் மூதாட்டி குடும்பம் நடத்தியுள்ளார்.
4000 இனங்கள்
பாம்புகள் கால்கள் அற்ற ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினம். பாம்புகளில் கிட்டத்தட்ட 4000 இனங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 600 பாம்புகள் விஷ பாம்புகள் ஆகும். இந்தியாவில் பாம்பிற்கு பஞ்சமில்லை. ராஜநாகம், கட்டு விரியன், நல்ல பாம்பு முதலியன இந்தியாவில் காணப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகளாகும். பாம்பு என்றால் படையை நடுங்கும். கர்நாடகாவில் ஒருவர் பாம்புடன் 4 நாட்கள் வாழ்க்கையை கடந்துள்ளார்.
தனிமையில்
கர்நாடக மாநிலம் பகல்கொடே மாவட்டத்திலுள்ள குள்ளஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாரதா மோனேஷா கம்பரா. சாரதா பல ஆண்டுகளாகவே இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பரா உடல்நலக்குறைவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். கணவரை பிரிந்த சாரதா வீட்டில் தனிமையாகவே வசித்து வந்திருக்கிறார்.
இறந்துபோன கணவர்
கடந்த சில நாட்களுக்கு முன் சாரதா வீட்டில் நாகபாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இந்த பாம்பை கண்ட சாரதா இறந்துபோன தனது கணவர் தான் பாம்பாக மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார். எனவே, இதற்கு எந்த தீங்கும் விளைவிக்க கூடாது என கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் சாரதாவிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை.
பெரும் சிரமப்பட்டு
சுமார் 4 நாட்களுக்கு சாரதா அந்த நாகப்பாம்பை தனது கணவரின் மறுபிறவி என நினைத்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த கிராம மக்கள் பெரும் சிரமப்பட்டு பாம்பினால் உண்டாகும் ஆபத்தை குறித்து சாரதாவிடம் இருந்து பாம்பை விளக்க முயற்சித்திருக்கின்றனர். ஒரு வழியாக சாரதா தனது கணவர் என நினைத்துக்கொண்டிருந்த பாம்பை வீட்டில் இருந்து அகற்ற ஒப்புக்கொண்டார்.
இச்சம்பவம் குள்ளஹள்ளி கிராமவாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.