ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு ஆதி நித்த குடும்பன் நல்லூர் என்ற பழமையான பெயரும் உண்டு. ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை மூலமாக 2004 ஆண்டுகளில் சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சத்யமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆய்வை தொடங்கினர். சுமார் 800 சதுர மீட்டர் பரப்பளவிற்குள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 178 முதுமக்கள் தாழிகள் கடந்த காலங்களில் கிடைத்தன.
இங்கு பல பானைகளில் மடக்கிவைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட மனிதர்களின் முழு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், இன்று நடைபெற்று வந்த ஆய்வு பணியில், தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம் ஓன்று கிடைத்துள்ளது என அகழ்வாய்வு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இங்கு பல்லாயிரக்கணக்கான தாழிகள் காணப்படுகின்றன. மனித எலும்புக்கூடுகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இறந்தவர்களின் உடல் சில சடங்குகளுக்கு செய்யப்பட்டு சில எலும்புகள் மட்டுமோ எடுக்கப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளன. ஒரு மண் பானையின் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் உருவமாக பொறிக்கப்பட்டுள்ளது.

