விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தினசரி விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் டூ புதுச்சேரி தினசரி விரைவு ரயில்
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்குப்பட்டு வந்த சாதாரண பயணிகள் ரயில் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சாதாரண பயணிகள் பயணிக்கும் ரயிலுக்கு பதிலாக தினசரி விரைவு ரயில் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, தினந்தோறும் விழுப்புரத்தில் இருந்து காலை 5.30 மணிக்கும், மாலை 5.50 மணிக்கும் விரைவு ரயில் புதுச்சேரிக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் எதிர் மார்க்கமான புதுச்சேரியில் இருந்து காலை 8.10 மணிக்கும், இரவு 8.35 மணிக்கும் விழுப்புரத்திற்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

