தி காஷ்மீர் பைல்ஸ்
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான ஹிந்தி படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. இப்படம் 53வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை.
சர்ச்சை பேச்சு
இந்நிலையில், நேற்று நிறைவு விழாவில் பேசிய தேர்வுக்குழுவின் தலைவர் நாடவ் லேபிட், ‛தி காஷ்மீர் பைல்ஸ் படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய மதிப்புமிக்க திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் இப்படம் திரையிடப்பட்டது சரியானது அல்ல’ என பேசினார். இவரின் இந்த பேச்சு கோவா திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பெரும் சர்ச்சையாகியுள்ளது.