திரிஷ்யம் படம்
மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் ‘திரிஷ்யம்’. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வெறும் ரூ.5 கோடி செலவில் உருவான இப்படம் ரூ.75 கோடி வரை வசூல் செய்தது. இத்திரைப்படம் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. மேலும், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செயப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இதனால் ரசிகர்களிடம் ‘திரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இயக்குனர் ஜீத்து ஜோசப் பேட்டி ஒன்றில், திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என்பதை உறுதி செய்துள்ளார்.