புதிய அப்டேட்
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ‘கட்டா குஸ்தி’ படத்தின் ‘சண்ட வீராச்சி’ எனும் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Our entertaining third single is on the way 🏃♀️#SandaVeerachi from #GattaKusthi#ThanneChinnadi from #MattiKusthi
Dropping today at 6PM 🥰 pic.twitter.com/Wvh4EluyMg
— Vishnu Vishal Studioz (@VVStudioz) November 29, 2022

