ரஞ்சிதமே பாடல்
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ , ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.
வாரிசு படத்தின் ரஞ்சிதமே எனும் முதல் பாடல் சமீபத்தில் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரஞ்சிதமே பாடல் தற்போது தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது. இப்பாடல் நாளை காலை 9.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

