அரசியல்இந்தியாதமிழ்நாடுவிவசாயம்

மேகதாது விவகாரம் – அமைச்சர் துரைமுருகன் கடிதம் !

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு உச்சநீதிமன்றத்தின் ஆணையை மதித்து நடக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார். அறிக்கையில், ‘கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை மேகதாது அணை தொடர்பாக அளித்த அறிக்கை இன்று செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியது ஏற்புடையது அல்ல. மேகதாது அணை பிரச்சனை தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாகும்.

இதை அரசியலாக்கும்‌ அவசியமோ, எண்ணமோ தமிழ்நாடு அரசிற்கு இல்லை. தமிழ்நாடு முதலமைச்சர்‌ இப்பிரச்சனை குறித்து பிரதமர்‌ மோடிக்கு கடிதம்‌ எழுதியுள்ளதை அரசியல்‌ ஆதாயத்திற்காக என்று கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல.

கர்நாடகா முதல்வருக்கு கடிதம்

ஆங்கில நாளிதழில்‌ வெளிவந்துள்ள செய்தித்தாளில் காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையம்‌ இதுவரை 15 கூட்டங்கள்‌ நடத்தி உள்ளதாகவும்‌, இக்கூட்டங்களில்‌ தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை எனவும்‌ கர்நாடக முதலமைச்சர்‌ தெரிவித்திருப்பது விந்தையாக உள்ளது. இது முற்றிலும்‌ தவறான செய்தியாகும்‌. கர்நாடக அரசின்‌ அதிகாரிகள்‌ இதுகுறித்து கர்நாடக முதலமைச்சருக்கு சரியான தகவல்கள்‌ அளிக்கவில்லை. இக்கூட்டங்களில்‌ தமிழ்நாடு அரசு உறுப்பினர்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ பங்கேற்றது பற்றிய விவரங்கள்‌ கூட அறிக்கைகளில்‌ பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Karnataka

மேகதாது நீர்த்தேக்க திட்டம்

மேலும், உச்சநீதிமன்ற ஆணைப்படி, எந்த மாநிலமும் தன் மாநில நதியின் நீருக்கு தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது. கர்நாடக அரசு பெங்களூரு நகரின் தண்ணீர் தேவைக்காக கட்டமைப்புகளை ஏற்கனவே முடிந்துள்ளது. ஆனால், தற்போது மேகதாது நீர்த்தேக்க திட்டத்தை, குடிநீர் தேவைக்காக என்ற போர்வையில், அதுவும்‌ 4.75 டி.எம்‌.சி தேவைக்காக, 67.6 டி.எம்‌.சி கொள்ளளவு கொண்ட ஒரு பெரிய அணையை கட்ட முயற்சிப்பது ஏற்புடையதல்ல.

Dam

உச்சநீதிமன்றத்தில்‌ வழக்கு

உச்சநீதிமன்றத்தில்‌ மேகதாது அணை குறித்த வழக்குகள்‌ நிலுவையிலுள்ள போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள்‌ மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானதாகும்‌. ஆகையால்‌, உச்சநீதிமன்றம்‌ இப்பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும்‌ வரை மேகதாதுவில்‌ அணை கட்டும்‌ முயற்சியில்‌ ஈடுபட வேண்டாம்‌ என கர்நாடக முதலமைச்சரை தமிழ்நாடு அரசின்‌ சார்பாக கேட்டுக்‌ கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts