தமிழ்நாடுவிவசாயம்

கேப்சூல் முறையில் நெல் சாகுபடி – தொழில்நுட்பத்தின் கூடிய நவீன விவசாயம் !

சராசரியாக ஒரு ஏக்கருக்கு 30 கிலோ நெல் தேவைப்படும் நிலையில் கேப்சூல் முறையில் இரண்டு கிலோ நெல் மட்டுமே போதும் என்கிறார் இந்த விவசாயி.
யார் இந்த விவசாயி ? என்ன விவரம் ? என்று பார்க்கலாம்.

மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூரை சேர்ந்தவர் விவசாயி ராஜசேகர்(51). இவர் எம்.காம், பி.எட், டிப்ளமோ இன் அக்ரிகல்ச்சர் என பல துறைகளில் படம் பெற்றுள்ளார். இருப்பினும் இவர் வேலை தேடி நகரங்களுக்கு செல்லாமல் விவசாய தொழிலை செய்து வருகிறார்.

இயற்கை விவசாயி 

குத்தாலம் தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டு இயற்கை விவசாயம் செய்து வருகின்றார். தனது நிலத்தில் கருப்புக்கவுனி, சீரகச்சம்பா, கருங்குறுவை, அறுப்பதாம் குருவை, தூயமல்லி, ரத்த சாலி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை பிரித்து நெல் சாகுபடி செய்து வருகின்றார். விவசாயி ராஜசேகர் ஓவ்வொருமுறையும் புதுமையான இயற்கை நெல் ரகங்களை முயற்சி செய்து வருகின்றார்.

கேப்சூல் முறை

இந்த வருடம் தனது வயலில் ஒரு ஏக்கர் நிலத்தில் கருங்குறுவை என்கிற பாரம்பரிய நெல் ரகத்தை கேப்சூல் முறையில் நடவு செய்துள்ளார். இதற்காக, உரமாக கடலைப் புண்ணாக்கு, இலுப்பை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, பிளான்ட் பிரமோடிங் கிராவல் ஆகியவற்றை 3க்கு ஓன்று மற்றும் 3நெல் விதைகளை ஒரு கேப்சூல்குள் வைத்து நிலத்தில் விதைத்துள்ளார். ஐசிஐசிஐ பவுண்டஷன் என்ற தனியார் நிறுவனத்தில் இவர் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கியுள்ளார்.

செலவினங்கள் குறைவு

மேலும், நாற்றங்கால் அமைத்து பயிரிடுவதை விட கேப்சூல் முறையில் நடவு செய்வதால் நேரமும், செலவும் குறைவு என்கிறார். ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 30 கிலோ நெல் விதை தேவைப்படும் நிலையில், கேப்சூல் முறையில் நடவு செய்ய வெறும் இரண்டரை கிலோ விதை நெல் மட்டுமே போதுமானது என்கிறார். பொதுவாக 110 நாள் சாகுபடிக்கு தேவைப்படும் ஆனால் கேப்சூல் முறையில் நடவு செய்யும் போது 90 நாட்கள் மட்டுமே போதுமானது என்கிறார் ராஜசேகர்.

கேப்சூல் முறையில் நடவு செய்வதற்கு சுமார் 15 ஆயிரம் செலவாகிறது. இது மற்ற நெல் நடவு முறையை விட செலவு குறைவுதான். இவரை மற்ற விவசாயிகளும் இவரின் கேப்சூல் நெல் நடவு முறையை உற்றுநோக்கி வருகின்றனர்.

 

Related posts