தமிழ்நாடு

மதுரையில் கந்துவட்டி கொடுமை – பணம் கேட்டு மிரட்டிய மூவர் கைது !

மதுரையில் குடும்ப பெண்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக ஒரு பெண் உள்பட மூவரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

கந்துவட்டி கொடுமை

மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த கீதா என்பவரும், பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெர்மனி என்பவரும், லில்லாபுரம் பகுதியை சேர்ந்த சித்திரை அழகு மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த லட்சுமி ஆகியோரிடம் இருந்து தல 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். அப்போது பணம் கொடுக்கும் போதே வட்டியாக 10 ஆயிரத்தை பிடித்தம் செய்து கொண்டு மீதி பணம் 40 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். தினமும் ஆயிரம் ரூபாய் வீதம் ஐம்பது நாட்களுக்குள் காட்டுமாறு கூறியுள்ளனர்.

Madurai

மிரட்டல்

குடும்ப வறுமை காரணமாக கடன் பெற்றியிருந்தாலும் அந்த தொகைக்கான வட்டியையும், மொத்த பணத்தையும் இருவரும் செலுத்திய பின்னரும் கூடுதலாக வட்டி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். கடன் கொடுத்த சித்திரை அழகு, லட்சுமி மற்றும் வில்லாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோர் கடன் பெற்ற கீதா மற்றும் ஜெர்மனி ஆகியோரது வீடுகளுக்கு சென்று மிரட்டி தகாத வார்த்தைகள் பேசி காயப்படுத்தி தொல்லை கொடுத்துள்ளனர்.

Money

காவல் நிலையத்தில் புகார்

இதனை தெடர்ந்து கந்துவட்டி தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத கீதா மற்றும் ஜெர்மனியும், அருகில் உள்ள கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், விசாரணை மூலமாக போலீசார் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சித்திரை அழகு, லட்சுமி, மோகன்ராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police Station

Related posts